உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 136 ஆம் இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 103 ஆம் இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் நிகழும் இனவாதம், மதவாதம், நிறவாதம், பொருளாதார ஏற்றதாழ்வுகள் இவற்றால் வெறுப்பு படர்ந்து ஆங்காங்கே போர்களும், சண்டைகளும் நடந்து வருகின்றன. கரோனாவிற்கு பின்னர் இவை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில்தான் 2022 ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் உலக மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியை ஒட்டி சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பட்டியலை ஐ. நா. வெளியிடுகிறது.
மகிழ்ச்சியான நாடு என்ற தேர்வு, தனிநபர் வருமானம், பிற மனிதர்கள் மீதான நம்பிக்கை , சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம் இவற்றை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படுகிறது.
அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள 146 நாடுகள் கொண்ட பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. பின்லாந்து கடந்த ஐந்து வருடமாகவே இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நாடுகள்:
மகிழ்ச்சியில் பின் தங்கும் இந்தியா:
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா எப்போதும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. இம்முறை வெளியிட்ட பட்டியலில் இந்தியாவுக்கு 136 ஆம் இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 121 ஆம் இடத்தில் உள்ளது.
தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்துள்ள ஆப்கானிஸ்தான் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.