உலகம்

மியான்மரில் பூகம்பம்: இந்தியாவிலும் அதிர்வுகள்; மக்கள் பீதி

ஏபி

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மியான்மர் தலைநகர் நேபைதாவில் இருந்து 396 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் மையமாக கொண்டு இந்த சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த பூகம்பத்தின் பாதிப்பு இந்தியாவின் அசாம், மேற்குவங்கம் மற்றும் பிஹார் மாநிலங்களிலும் உணரப்பட்டது. உயிர் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ரிக்டர் அளவில் 6.9 என்று பதிவானதாகக் கூறியுள்ளது.

ஏ.பி. செய்தி நிறுவன நிருபர் இந்த பூகம்பம் ஏற்பட்ட போது யாங்கூனில் மருத்துவமனையில் இருந்துள்ளார் 7 மாடிக் கட்டிடமான இது இருமுறை ஒரு நிமிடத்திற்கும் மேல் ஆடியதாகக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து ஊழியர்கள், நோயாளிகள் அனைவரும் பீதியில் சாலைகளுக்கு வந்து உதவி கேட்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தின் தாக்கம் டாக்கா வரையில் இருந்ததாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் டெல்லி, அசாம், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களிலும் கொல்கத்தா, ஷில்லாங், குவஹாத்தி, பாட்னா ஆகிய இடங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

கொல்கத்தாவில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியில் தெருக்களுக்கும், சாலைகளுக்கும் ஓடி வந்தனர். கொல்கத்தாவில் சில கட்டிடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.

திபெத்திலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT