தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் கூட்டாக இணைந்து ரோந்து பணி யில் ஈடுபடும் என்று அமெரிக்க பாது காப்புத் துறை அமைச்சர் ஆஸ்டன் கார்ட்டர் அறிவித்துள்ளார்.
தென்சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வரு கிறது. இந்த விவகாரத்தில் சீனாவு க்கு எதிராக வியட்நாம், பிலிப் பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அந்த நாடு களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க பாது காப்புத் துறை ஆஷ் கார்ட்டர் தற் போது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் பேசிய போது, தென் சீனக் கடலில் அமெரிக்க, பிலிப்பைன்ஸ் கடற் படைகள் இணைந்து ரோந்து பணி யில் ஈடுபடும். மேலும் பிலிப் பைன்ஸ் நாட்டில் 300 அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து தங்கியிருப் பார்கள் என்று அவர் அறிவித்தார்.
இதனிடையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் இணைந்து கடந்த 4-ம் தேதி முதல் தென்சீனக் கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் மொத்தம் 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ள னர். சீனா சொந்தம் கொண்டாடி வரும் ஸ்பார்ட்டி தீவுப் பகுதியில் போர் பயிற்சி நடைபெறுகிறது.இந்தப் போர் பயிற்சியில் ஜப்பான் பங்கேற்கவில்லை. ஆனால் போர் பயிற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 2 ஜப்பானிய போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன.
அண்மையில் டெல்லி வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டன் கார்ட்டர், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்துப் பேசினார். அப்போது ராணுவ, கடற்படை, விமானப் படைத் தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீனாவின் சர்வாதிகார போக்கை கட்டுப்படுத்த இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.