ஈக்வடார் நிலநடுக்கத்தில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 350 ஆக உயர்ந் துள்ளது. 2500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தென்அமெரிக்க நாடான ஈக்வடா ரில் சனிக்கிழமை நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மனாபி மாகாணம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன கருவிகள் இன்னும் சென் றடையவில்லை. இதனால் அப் பகுதி மக்கள் வெறும் கரங்களால் இடிபாடுகளை அகற்றி உறவினர் களைத் தேடி வருகின்றனர்.
இதுவரை 350 பேர் உயிரிழந் திருப்பதாக அதிகாரபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது. எனினும் நூற் றுக்கும் மேற்பட்டோரை காண வில்லை. அவர்கள் உயிரிழந்திருக் கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதன்படி பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டக்கூடும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும் 4600 போலீஸாரும் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மனாபி உட்பட 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
வெனிசூலா, கொலம்பியா, சிலி, ஸ்பெயின், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் விமானங்கள் மூலம் ஈக்வடாருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளன.
ஜப்பானில் கடந்த வியாழக் கிழமை முதல் தொடர் நிலநடுக்கங் கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கும் ஈக்வடார் நிலநடுக்கத்துக்கும் தொடர்புள்ளது என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை சர்வதேச புவியியல் ஆய்வாளர்கள் மறுத்துவிட்டனர். இருநாடுகளில் நேரிட்ட நிலநடுக்கங்களுக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு திரும்பினார் அதிபர்:
வாடிகனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட போர்டோவிஜோ நகரில் மீட்புப் பணிகளை நேரடியாக பார்வையிட்ட அதிபர் கோரியா, "மிகப் பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது. பலி எண்ணிக்கை இனி வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கலாம். ஆனால், இடிபாடுகளுக்கு இடையே நிறைய பேர் உயிருடன் சிக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, உயிருடன் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள வேதனையின் தாக்கம் அதிகமானது. இருப்பினும், இந்த நிலைமையை சமாளித்து முன்னேறிச் செல்வோம். எங்கள் வேதனை பெரிதுதான்; ஆனால் எம்மக்களின் உத்வேகம் அதைவிட பெரிது. எனவே நாங்கள் மீண்டு எழுவோம்" என்றார்.