உலகம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி வாழ்த்து: இருதரப்பு வர்த்தக உறவு குறித்து பேச்சு

செய்திப்பிரிவு

மத்திய இணை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதி மைக் புரோமேன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புரோமேனின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை புரோமேன் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அமைச்சராக நியமிக்கப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்ததுடன், அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக உறவு குறித்து பேசினார்.

குறிப்பாக, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற உள்ள ஜி20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் புரோமேன் கலந்துகொள்ள திட்ட மிட்டுள்ளார். அப்போது, இந்தியா வுடனான இருதரப்பு வர்த்தக பேச்சு தொடர்பான இப்போதைய நிலையை மறு ஆய்வு செய்யவும், வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சீதாராமனுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அவர் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இந்த இரு தலைவர்களும் முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான உறவுகள் வலிமை யாக இருப்பதாகவும் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் புரோமேன் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய போது, இருதரப்பு வர்த்தகத்தை 50,000 கோடி அமெரிக்க டாலராக அதிகரிப்பது என இலக்கு நிர் ணயிக்கப்பட்டது. இதற்கு தேவை யான நடவடிக்கைகளை இந்த இரு தலைவர்களும் மேற்கொள் வார்கள் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT