இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை சோதித்துப் பார்த்ததாக வடகொரியா வெள்ளிக் கிழமை அறிவித்தது.
குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன்கொண்ட 3 ஏவுகணை களை வட கொரியா தங்கள் நீர்ப்பரப்பில் ஏவியதாக தென் கொரியா வியாழக்கிழமை கூறியது. இதை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியாவின் அறிவிப்பு அமைந்துள்ளது.
வட கொரியாவின் கிழக்கு துறைமுக நகரில் இருந்து இந்த ஏவுகணை வியாழக்கிழமை ஏவப்பட்டதாகவும் இவை 190 கி.மீ. தொலைவு பறந்து சென்று தங்கள் நீர்ப்பரப்பில் விழுந்ததாகவும் தென் கொரியா கூறியது.
என்றாலும் இது எந்தவகை ஏவுகணை, வட கொரியாவின் திட்டங்கள் என்ன என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.