உலகம்

உக்ரைனில் இந்திய கொடியை பயன்படுத்தும் பாக். மாணவர்கள்

செய்திப்பிரிவு

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நபர், இந்த உண்மையை பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத மாதா கீ ஜே என்ற உரக்க கூறி வருகின்றனர்.

SCROLL FOR NEXT