மாஸ்கோ: ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ், துபாய் சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில், கேமரா முன்பு ‘No War Please’ என்று பதிவு செய்தார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால், தலைநகர் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.
புதினுக்கு எதிர்ப்பு: ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேரை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், ரஷ்யாவில் தொடர்ந்து புதினின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ், துபாய் சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில், கேமரா முன்பு ‘No War Please’ என்று எழுதினார்.
ஆண்ட்ரி ரூப்லெவ்வின் இச்செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.