உலகம்

பப்புவா நியூ கினி விமான விபத்தில் 12 பேர் பலி

ஏபி

பப்புவா நியூ கினியில் சிறிய விமானம் ஒன்று வெடித்துச் சிதறியதில் 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் பலியாயினர்.

இதுகுறித்து அந்நாட்டு மேற்கு மாகாண காவல் துறை தளபதி ஜோசப் புரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, “கடந்த புதன்கிழமை நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கியுங்கா நகரில் உள்ள விமான நிலையத்தை நோக்கி ஒரு விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென அப்பகுதியில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் வெடித்துச் சிதறியது. இதில் 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் பலியாயினர்” என்றார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். மலைகள் அதிக அளவில் இருப்பதாலும், அடிக்கடி வானிலை மோசமடைவதாலும் பப்புவா நியூ கினியில் விமான விபத்து அவ்வப்போது நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT