உலகம்

பஹ்ரைனில் இந்தியர் சாவு

செய்திப்பிரிவு

கடந்த 23 ஆண்டுகளாக ஒரு முறைகூட தாயகம் திரும்பாமல், பஹ்ரைனில் தனியாக வசித்து வந்த 58 வயது இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அவர் தங்கியிருந்த ஊரிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கேரளத்தைச் சேர்ந்தவர் பொரதல கேசவன் ஜோஷி குமார். பஹ்ரைனுக்கு சென்ற இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இடையில் தனது குடும்பத்தாருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய குமாருக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிலேயே கீழே விழுந்த இவர் இறந்துவிட்டார். குமாரின் உடலை பஹ்ரைனிலேயே அடக்கம் செய்ய அவரது வளர்ப்புத் தாய் சம்மதித்து விட்டார்.

இதுகுறித்து பஹ்ரைனில் உள்ள குமாரின் உறவினர் விஷ்ணு வியாஸ் கூறுகையில், "குமாரின் வளர்ப்புத் தாய் நெருங்கிய உறவினர் இல்லை என்பதால், அவரது உடலை இங்கேயே அடக்கம் செய்வதற்கு கேரள அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT