உலகம்

இராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்: ஏராளமானோர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

இராக்கின் வடக்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதியை சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அங்கு அரசுப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஏராளமானோர் கொல்லப் பட்டனர். நினிவே பிராந்தியத்தின் முக்கிய நகரான தல் அபாரின் பாதிப் பகுதி தற்போது தீவிரவாதிகளின் வசம் உள்ளது.

இந்த நகரில் சுமார் 700 தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக் கின்றனர். பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இதனி டையே தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களும் பங்கேற்க இராக் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென் டகன் வெளியிட்டுள்ள அறிக் கையில், இராக்கில் வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப் புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே இராக் அரசியல் நிலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரானுடன் இணைந்து இராக் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT