உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நீதிமன்றத்தில் சரண்

பிடிஐ

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான போராட் டத்தை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஜத்ராபரி என்ற பகுதியில் ஒரு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தூண்டிவிட்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த அந் நாட்டின் செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் கலீதா ஜியாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து நேற்று அவர் நீதி மன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

முன்னதாக கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கா னோர் திடீரென நீதிமன்ற வளாகத் துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு ஏற்பட்ட பதற்றம் தணிந்தது.

SCROLL FOR NEXT