உலகை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸின் வடிவத்தை இந்தியர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு ஆளாகும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழக் கத்தை விட தலை சிறியதாகவும் மூளை பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா வின் பர்டூயூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜிகா வைரஸின் வடிவத்தை கண்டு பிடித்துள்ளது. அந்த குழுவின் ரிச்சர்டு குன் என்ற விஞ்ஞானி கூறும்போது, ‘‘ஜிகா வைரஸின் வடிவம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து அதை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளையும் உருவாக்க முடியும்’’ என்றார்.
ஆராய்ச்சி குழுவில் இடம்பிடித்துள்ள இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி மாணவியான தேவிகா சிரோஹி கூறும்போது, ‘‘ஜிகா வைரஸ் சிசுவின் மூளை வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. எனவே தான் அதன் வடிவத்தை கண்டுபிடிக்க முயற்சித் தோம். இதன் மூலம் அந்த வைரஸ் எப்படி நோயை பரப்புகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.