உலகம்

அமெரிக்க அருங்காட்சியகத்தில் பயன்பாட்டுக்கு வரும் தங்க கழிவறை

பிடிஐ

அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றில், 18 காரட் தங்கத்தால் ஆன கழிவறை விரைவில் நிர்மானிக்கப்பட உள்ளது. இதை பார்வையிடுவதற்கு மட்டுமின்றி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

நியூயார்க் நகரில் கக்கன் ஹேம் அருங்காட்சியகம் உள்ளது. இங்குள்ள பொது கழிவறைகளில் ஒன்றில் தங்கக் கழிவறை நிறுவப் பட உள்ளது. இதுகுறித்து அருங் காட்சியகத்தின் செய்தித் தொடர் பாளர் மொல்லி ஸ்டூவர்ட் கூறும் போது, “இந்த அருங் காட்சியகத் தில் 18 காரட் தங்கத்தால் ஆன கழிவறை நிறுவப்பட உள்ளது. பார்வையாளர்கள் இந்தக் கழி வறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொள்ளலாம். பார்வை யிடுவது மட்டுமின்றி பயன்படுத் தவும் செய்யலாம்.

மவுரிஸியோ கேட்டிலன் என்ற கலைஞர் பணியிலிருந்து ஓய்வு அறிவிக்கும் முன் தனது இறுதிப் படைப்பாக இதனை உருவாக் கினார். கழிவறைக்கு வெளியே பாதுகாவலர் நிறுத்தப்பட்டிருப் பார். இவர் கழிவறை சேதப் படுத்தப்படாமல் உள்ளதா என்பதை சோதிப்பார். நீண்ட காலத்துக்கு இந்த கழிவறை காட்சிக்கும் பயன்பாட்டுக்கும் இருக்கும்” என்றார்.

அருங்காட்சியகத்தின் தங்கக் கழிவறை திட்டம் பார்வை யாளர்களை கவரும் முயற்சி யாக கருதப்படுகிறது. பெருமளவு பார்வையாளர்கள் அருங்காட்சி யகம் வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

SCROLL FOR NEXT