வியட்நாம் நாடாளுமன்றத்துக்கு முதல் பெண் சபாநாயகராக நூயென் தி கிம் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாமின் 13-வது தேசிய நாடளுமன்றத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடந்தது. 481 வாக்களித்த இத் தேர்தலில், 472 பேர், நூயென் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதர வாக வாக்களித்தனர்.
அதேநேரத்தில், தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், மொத்தம் பதிவான 477 வாக்குகளில், 467 வாக்குகள் நூயென்னுக்கு ஆதரவாக அளிக் கப்பட்டிருந்தன.
முன்னதாக, கடந்த 2011 ஜூலை முதல், நாடாளுமன்றத்தின் துணைத் தலைவராக நூயென் செயல்பட்டு வந்தார். இத்தகவலை சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இதழான ஜின்குவா வெளியிட் டுள்ளது.