ஆள் இல்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள் ஓர் அபாயகரமான முன்னுதாரணம் என்று அந்நாட்டு ராணுவ ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், யெமன், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான வஜிரிஸ்தானிலும் அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. சில நேரங்களில் தவறு தலாக ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களையே அமெரிக்க ஆள் இல்லாத விமானங்கள் குண்டு வீசி கொன்றுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது: அமெரிக்காவை பின்பற்றி பிற நாடுகளும் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் வேண்டப்படாத நாடுகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இது சர்வதேச அளவில் போராக வெடித்துவிடக் கூடும்.
அதே தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் நமது தரப்புக்கு உயிர் சேதம் ஏற்படாமல் தாக்குதல் நடத்துவதற்கு ஆள் இல்லாத விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அல்-காய்தா தீவிரவாதிகள் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அவர்க ளைக் கொல்ல தங்களுக்கு முழு உரிமை உண்டு என்பதுபோல அமெரிக்கா செயல்படுகிறது என்ற எண்ணம் உலகின் பிற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் ஆள் இல்லாத விமானத் தாக்குதல் நடத்துவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் ஆள் இல்லாத விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தகவலை மட்டுமே அமெரிக்க தரப்பு வெளியிடுகிறது. யார் மீது அத்தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் எவரும் உயிரிழந்தனரா என்ற தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை.