வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) அவர் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவு அமைச்சர் ஏ.எச்.முகமது அலி ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் இன்று வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலீதா ஜியாவை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முதல் முறையாக வங்கதேசம் சென்ற போது அவரை காலீதா ஜியா சந்திக்கவில்லை.