நேபாளத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தினால் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் வெடிப்புகளும் துளைகளும் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பயங்கர பூகம்பம் ஏற் பட்டது. இதில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
இயற்கையின் இந்த கோர தாண்டவம் உறுதியாக நிற்கும் மலைகளையும் அசைத்து பார்த்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் வெடிப்புகளும் துளை களும் ஏற்பட்டிருப்பதாக கண் டறியப்பட்டுள்ளது. இதனை எவரெஸ்ட் சிகர மலையேற்ற சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து நேபாள மலையேற்ற சங்கத்தின் தலைவர் அங் ஷெரிங் கூறும்போது, ‘‘நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து எண்ணற்ற நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இவை எவரெஸ்ட் மலை பகுதிக்கும் சில சேதங்களை ஏற்படுத்திவிட்டது. இதனால் சிகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த முறை மலையேறுவதற்கு கூடுத லான ஏணிகளும், கயிறுகளும் தேவைப்படும்’’ என்றார்.
எவரெஸ்ட் சிகரத்தின் மலைப் பாதையில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்புகளையும், துளைகளை யும் சரிபார்க்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் மலை யேறுவதற்காக வந்திருந்த மலை யேற்றக் குழுவினர் தொடர்ந்து அடிவாரத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.