இராக் ராணுவ தலைமையகத் தில் நேற்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூத்த ராணுவ தளபதி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சிரியா, இராக்கில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிர வாதிகள் இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்க கூட்டுப் படையின் தாக்குதல்களால், ஐ.எஸ். அமைப்பு பின்னடை வைச் சந்தித்துள்ளது.
இதையடுத்து ஐ.எஸ். தீவிர வாதிகள் அண்மைக்காலமாக தற்கொலைப் படைத் தாக்குதல் களை நடத்தி வருகின்றனர். இராக்கின் அன்பார் மாகாணம் ஹரிதாவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று 4 தற்கொலைப் படை தீவிர வாதிகள் ஊடுருவி வெடித்துச் சிதறினர். இதில் மூத்த ராணுவ தளபதி மற்றும் 5 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.