அமெரிக்காவுக்கு மெக்சிகோ பாலியல் பலாத்காரர்களையும், போதை மருந்து கடத்தல்காரர்களையும் அனுப்புகிறது என்று டோனால்டு டிரம்ப் கூறியதற்கு மெக்சிகோவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று ஈஸ்தர் சடங்குகளில் ஈடுபட்ட மெக்சிகோவாசிகள், டோனால்டு டிரம்பின் மெக்சிகோ மக்கள் குறித்த அவதூறான கருத்தை எதிர்த்து அவரது உருவபொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்தனர்.
மெக்சிகோ முழுதும் நேற்று உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. அதாவது பியூப்லா முதல் மெக்சிகோ தொழிற்பேட்டை மாண்டெர்ரி வரை டிரம்ப் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மற்றும் அகதிகளுக்கு எதிராக பேசி வருகிறார்.
இவரது பேச்சுகளை மெக்சிகோ அதிபர் என்ரிக் பீனா நீட்டோ, அடால்ஃப் ஹிட்லர், மற்றும் முசோலினி ஆகிய பாசிஸ்டுகளுடன் ஒப்பிட்டுள்ளார்.