உலகம்

கடவுளே பூமியைப் படைத்தார் என்று நம்பும் 40% அமெரிக்கர்கள்

செய்திப்பிரிவு

10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் இந்தப் பூமியைப் படைத்தார் என்று 10 அமெரிக்கர்களில் 4 பேர் நம்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை 40% அமெரிக்கர்கள் ஏற்கவில்லை என்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சரியமேற்படுத்திய ஒன்று.

ஆனால், பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் பரிணாமத்தை இயக்கியவர் கடவுளே என்று வேறு சிலர் கருதுகின்றனராம். கடவுள் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களில் பலர் சமய நம்பிக்கைக் கொண்ட வயதானோர் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனாலும் கடவுள் இல்லாமலேயே மனித இனம் பரிணாம வளர்ச்சியடைந்தது என்று கருதுவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள். 2013ஆம் ஆண்டு இதே போல் நடத்தப்பட்ட ஆய்வில் அதிசய நிகழ்வுகளில் 80% அமெரிக்கர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது.

SCROLL FOR NEXT