உலகம்

சிரியா அமைதிப் பேச்சு தொடக்கம்

ஏபி

சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தை ஜெனீவாவில் நேற்று தொடங்கியது.

அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் பிப்ரவரி 27-ம் தேதி சிரியாவில் அண்மையில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதிபர் ஆசாத் படைகளும் மிதவாத எதிர்க்கட்சிகளும் சண்டைநிறுத்தத்தில் கையெழுத் திட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக ஐ.நா. சபை சார்பில் இருதரப்புக்கும் இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அதிபர் ஆசாத் மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஜெனீவாவில் முகாமிட்டுள்ளனர்.

அடுத்த 18 மாதங்களுக்குள் சிரியாவில் அதிபர் தேர்தலை நடத்தி புதிய அரசை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை யோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெனீவா பேச்சுவார்த்தையில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT