உலகம்

இலங்கை போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை: சிறிசேனா அறிவிப்பு

பிடிஐ

இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கமாட்டோம் என்று அந்த நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 அக்டோபரில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஆரம்பம் முதலே வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு கூறிவருகிறது. இதே கருத்தை அந்த நாட்டு அதிபர் சிறிசேனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் வெள்ளியன்று நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் அவர் பேசியதாவது:

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன். நமது நாட்டின் நீதித்துறை, நீதிபதிகள் மீது எனக்கு முழுநம்பிக்கை உள்ளது. அவர்களே போர்க்குற்ற விசாரணையை நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT