உலகம்

அமெரிக்க நகரங்களைப் புரட்டியெடுத்த பலத்த சூறாவளி: கென்டக்கியில் 50 பேர் பலி

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் கென்டக்கி நகரில் வீசிய பலத்த சூறாவளியில் சிக்கி 50 பேர் பலியாகினர். இந்த சூறாவளி சமீப காலத்தில் தாக்கிய மிகக் கொடூரமான சூறாவளி என அம்மாகாண ஆளுநர் ஆண்டி பெஸ்ஹீர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சூறாவளியில் சிக்கி 50 பேர் பலியாகி இருப்பதாகவும். இந்த பலி எண்ணிக்கை 70ல் இருந்து 100 வரை உயர்ந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்லார். மேலும் கென்டகி வரலாற்றில் இப்படியொரு மோசமான சூறாவளியை தான் சந்தித்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கென்டக்கி பகுதியில் இயங்கிவரும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தான் உயிர்ப்பலி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்டக்கியில் மட்டுமல்ல அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் சுழற்றியடித்த சூறாவளியில் ஒரு தொழிற்சாலை பெருத்த சேதமடைந்ததாகவும், இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்த தொழிற்சாலையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர், சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட எட்வர்ட்ஸ்வில்லே மக்களுடன் தான் துணை நிற்பதாக ட்வீட் செய்துள்ளார். சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உரிய நேரத்தில் செய்துதரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT