உலகம்

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ்

செய்திப்பிரிவு

ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுச் செயலாளருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால், அடுத்த சில நாட்களுக்கு அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (புதன்கிழமை) அவர், மான்ஹாட்டனில் நடைபெறும் ஐ.நா. ஊடக சம்மேளனத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. நாளை பயங்கவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்தக் கூட்டத்திற்கு நைஜர் நாட்டு அதிபர் முகமது போஸம் தலைமை ஏற்பார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐ.நா தலைவர் தனிமைப்படுத்துதலை அறிவித்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து மேலும் தகவல்களைப் பகிர பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி டுஜாரிக் விவரிக்க மறுத்துவிட்டார்.

குத்ரேஸ் அண்மையில் தான் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். உலகளவில் இன்னும் சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாத மக்கள் இருக்கும் நிலையில் வளர்ந்த நாடுகள் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை தள்ளிவைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தி வருகிறது. இதனால், மிகுந்த தயக்கத்திற்குப் பின்னரே அண்டோனியோ குத்ரேஸ் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT