உலகம்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்: இறுதிப் பட்டியலில் தமிழர் சீனிவாசன்

செய்திப்பிரிவு

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் 3 பேர் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் தமிழர் ஸ்ரீ சீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் உள்ளனர். அந்த நாட்டு சட்டத்தின்படி நீதிபதிகள் இறக்கும் வரை பதவியில் நீடிக்கலாம். அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்காலியா உயிரி ழந்தார். அந்த காலியிடத்தை நிரப்ப அதிபர் ஒபாமா உத்தர விட்டுள்ளார்.

மாகாண சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி மாகாண சர்க்கியூட் நீதிபதிகளில் பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் 3 நீதிபதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கொலம்பியா மாகாண சர்க்கியூட் நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீ சீனிவாசன் மற்றும் நீதிபதி மேரிக் பி கார்லேண்ட், நீதிபதி பிரவுண் ஜேக்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ சீனிவாசன் தேர்ந்தெடுக்கப் பட்டால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கும் முதல் இந்து என்ற பெருமையை பெறுவார்.

ஸ்ரீ சீனிவாசனின் தந்தை தமிழகத் தின் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். அவரது தாயார் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

SCROLL FOR NEXT