பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

முதலில் ஒன்று அடுத்து 8: அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒமைக்ரானின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நியூயார்க் நகரில் 5-பேர் ஒமைக்ரான் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த பாதிப்பு 8 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் குறித்தும், அதன் பரவல், பாதிப்பு குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டவுன் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. ஆனால், தற்போது அமெரி்க்காவிலும் ஒமைக்ரான் புகுந்துவிட்டது.

அமெரிக்காவில் டெல்டா வைரஸின் பாதிப்பே இன்னும் முழுமைாயகச் சரியாகாத நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கவாில் ஒமைக்ரானால் கலிபோர்னிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் 22ம் தேதி கலிபோர்னியா திரும்பியிருந்தார். அதன்பின் அவருக்கு நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் பாதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மின்னசோட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகரின் ஆளுநர் கதே ஹோச்சல் கூறுகையி்ல் “ அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரி்த்துள்ளது. இதில் நியூயார்க் மாநிலத்தில் மட்டும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது அச்சப்பட வேண்டியது இல்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன். இந்த ஒமைக்ரான் அமெரி்க்காவுக்குள் வரும் என்பது தெரியும். அதைத் தடுக்க தேவையான கருவிகள் உள்ளன. தடுப்பூசி செலுத்துங்கள், தடுப்பூசி முடித்தவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துங்கள், முகக்கவசம் அணியுங்கள்” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT