அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை புறக்கணிக்க யூத மக்கள் முடிவு செய்துள்ளனர்.
குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அவர் யூத மதத் தலைவர்களின் ஆதரவை கோரி வாஷிங்டனில் வரும் திங்கள்கிழமை சிறப்பு கூட்டம் நடத்துகிறார்.
ஆனால் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக பெரும்பாலான யூத மதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்கவாழ் யூதர்களின் மூத்த தலைவர் ரபிஸ் டேவிட் பஸ்கின் கூறியபோது, டொனால்டு டிரம்ப் மக்களிடம் வெறுப்பை விதைத்து வருகிறார். மதவாதத்தை தூண்டி வருகிறார். எனவே அவரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். பெரும்பாலான யூத மதத் தலைவர்கள் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.