ஆற்றில் படகு செல்வது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகிறது. 
உலகம்

உலகின் சுத்தமான ஆற்றில் ஒரு படகு பயணம்: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்

செய்திப்பிரிவு

ஆற்றில் படகு செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஆற்றில் பயணிக்கும் படகு வானத்தில் மிதப்பது போல தோன்றுகிறது. அந்த அளவுக்கு அந்த ஆற்று நீர் அவ்வளவு சுத்தமாக உள்ளது. ஆற்றின் அடியில் உள்ள தாவரங்கள், கற்கள் ஆகியவை கண்ணாடி மூலம் பார்ப்பது போல தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.

இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய ஜல் சக்தி அமைச்சகம், “மேகாலயா மாநிலத்தில் ஓடும் உம்காட் ஆற்றில்தான் இந்தப் படகு செல்கிறது. தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆறு, உலகிலேயே சுத்தமான ஆறுகளில் ஒன்றாக திகழ்கிறது. இதை சுத்தமாக வைத்திருக்கும் அம்மாநில மக்களுக்கு நன்றி. நாட்டில் உள்ள அனைத்துஆறுகளும் இதுபோல சுத்தமாகஇருக்க வேண்டும் என விரும்புகிறோம். மேகாலயா மக்களுக்கு தலை வணங்குகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 3 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT