கோப்புப்படம் 
உலகம்

பிற நிறுவனங்களுக்கு கரோனா மாத்திரை தயாரிக்க பைஸர் நிறுவனம் அனுமதி

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மாத்திரை தயாரிப்பதற்கான அனுமதியை அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.

பாக்ஸ்லோவிட் என்ற பெயரிலான இந்த மாத்திரை தயாரிப்புக்கான துணை லைசென்ஸை பைஸர் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மாத்திரை தயாரிப்பு மூலம் 95 நாடுகள் பயன் அடையும். இதன் மூலம் உலகின் 53 சதவீத மக்கள் பயன் பெறுவர்.

சர்வதேச மருந்து காப்புரிமை (எம்பிபி) அடிப்படையில் பைஸர்நிறுவனம் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆய்வகத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எம்பிபி என்ற அமைப்பானது ஐக்கிய நாடுகள் ஆதரவுடன் செயல்படுவதாகும். இதன்படி இந்த மாத்திரை தயாரிப்புக்கான ராயல்டி எதுவும் பிற நிறுவனங்களிடமிருந்து கிடைக்காது. இதனால் மருந்து விலை மிகக்குறைவாக இருக்கும். இந்த ஒப்பந்தமானது நோய் எதிர்ப்பு மருந்து தொடர்பான பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்த மாத்திரை கரோனா நோய் பாதிப்புக்குள்ளாவதை 89 சதவீதம் வரை தடுப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதைப் பாதுகாக்க குளிர்பதன வசதிதேவையில்லை.

உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) அமைப்பு கரோனா வைரஸ் தொற்றை அவசர கால நோயாக அறிவித்ததைத் தொடர்ந்து ராயல்டி பெறாமல் மருந்து தயாரிப்பதற்கான லைசென்ஸை பைஸர் பிற நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.

SCROLL FOR NEXT