காங்கோவில் நிலை நிறுத்தப் பட்டுள்ள ஐ.நா. அமைதி பேணும் படையில் பாதியை திரும்பப் பெற வேண்டும் என அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மிகச் சொற்ப அளவி லான வீரர்களை மட்டும் திரும்பப் பெற ஐ.நா. பொதுச் செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.
காங்கோவில் 20 ஆயிரம் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் பணிபுரிகின்றனர். நடப்பாண்டு இறுதிக்குள் இவர்களில் 10 ஆயிரம் பேரை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும்.
இதனால் பாதுகாப்பு ஸ்திரத் தன்மை பாதிக்காது என நம்பு கிறோம் என்று காங்கோ வெளி யுறவுத் துறை அமைச்சர் ரேமண்ட் சிபாண்டா , பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்திருநதார்.
ஆனால், ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ- மூன், காங்கோவின் பாதுகாப்பற்ற சூழலை மனதில் கொண்டு 1,700 வீரர்களை திரும்பப்பெற்றால் போதும் என பரிந்துரை செய்துள்ளார்.
ருவாண்டாவில் 1994-ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை, காங்கோவிலும் பரவியது. ருவாண் டாவிலிருந்து தப்பிய நூற்றுக் கணக்கான ஹூட்டு இன மக்கள், காங்கோ சென்று தற் போது அங்கு ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
2013-ல் காங்கோ மற்றும் ருவாண்டா உகாண்டா உள்ளிட்ட இதர 10 ஆப்பிரிக்க நாடுகளும் உடன்படிக்கை மேற்கொண்டன. அதன்படி, ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது, ஆயுத குழுக்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது. இக்கலவரத்தைத் தொடர்ந்து, ஐ.நா. அமைதிப் படை காங்கோ உள்ளிட்ட நாடு களில் முகாமிட்டுள்ளது.
காங்கோவில் பழங்குடி இனக் குழுக்களுக்குள் அவ்வப்போது வன்முறை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதனை ஒடுக்கி அமைதியைப் பேண ஐ.நா. அமைதிப் படை அங்கு முகாமிட் டுள்ளது.
படிப்படியாக படை எண் ணிக்கை குறைக்கப்பட்டு வரும் நிலையில், 10 ஆயிரம் வீரர்களைக் குறைக்க வேண்டும் என்ற காங்கோ அரசின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டு, 1700 வீரர்கள் திரும்பப் பெறப்பட உள்ளனர்.