அமெரிக்காவில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு கட்டாத இந்திய கட்டுமான நிறுவனத்துக்கு நியூயார்க் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நியூயார்க் நகரில் அவினாஷ் மல்ஹோத்ரா ஆர்கிடெக்ட்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் அவினாஷ் மல்ஹோத்ரா. இவரது நிறுவனம் சார்பில் நியூயார்க் பகுதியில் 650 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
இந்தக் குடியிருப்பு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு ஆய்வுக் குழு விசாரணை நடத்தியது.
பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு கட்டுமான நிறுவனம் சார்பில் ரூ.26 லட்சத்துக்கு 63 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவும் ரூ.20 லட்சத்து 70 ஆயிரத்தை அரசுக்கு அபராதமாக செலுத்தவும் சிறப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.