பேன்ட் பையில் வைத்திருந்த செல்போனின் பேட்டரி வெடித்து பாகிஸ்தான் இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த ‘லைவ்லீக்’ இணையதளம் அதிர்ச்சி வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டுள் ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி சாலையில் நடந்து கொண்டிருக் கிறார். திடீரென அவரது பேன்ட் பையில் வைத்திருந்த செல்போனில் பேட்டரி வெடித்து தீப்பிடிக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் தீ அவரது உடல் முழுவதும் பரவுகிறது.
அருகில் இருப்பவர்கள் பஞ்சாபி மொழியில் பதற்றத்துடன் பேசுகின்ற னர். ‘அவர் மீது துணியை போர்த் துங்கள், தண்ணீரை ஊற்றுங்கள்’ என்று கூக்குரலிடுகிறார்கள். ஒரு வியாபாரி ஓடிவந்து ஒரு வாளி தண்ணீரை அந்த இளைஞர் மீது ஊற்றி தீயை அணைக்கிறார். இதில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்த நகரம், அந்த இளைஞர் யார் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.