உலகம்

பாகிஸ்தானில் கன மழைக்கு மேலும் 11 பேர் பலி

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் வடமேற்கு நக ரான பெஷாவரில் கனமழை காரண மாக நேற்று மேலும் 2 இடங்களில் வீட்டின் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 11 பேர் இறந்தனர்.

குண்டால் என்ற இடத்தில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில் 5 குழந்தைகள், 1 பெண் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

தைமர் என்ற இடத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து கன மழைக்கு இடையே உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பெஷாவரில் நேற்று முன்தினம் இரவு கனமழையால் வீடு இடிந்து, 7 பேர் இறந்தனர். பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT