ஜப்பான், தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கு வதைவிட அந்த நாடுகள் தற்காப்புக் காக அணு ஆயுதங்களை தயாரித் துக் கொள்ள ஆதரவு தெரிவித் துள்ளார் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்காவில் அதிபர் வேட்பா ளரை தேர்ந்தெடுப்பதற்கான உட் கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. குடி யரசு கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் நடைபெற்ற சிஎன்என் டவுன் ஹால் விவாதத்தில் பங்கேற்ற ட்ரம்ப் கூறியதாவது:
ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கையாக உள்ளது. ஆனால் இவையெல்லாம் மாறும் காலம் வரலாம். ஏனென் றால், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
மேலும் ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு முட்டாள்தனமான முடிவு. இதன் மூலம் அந்த நாடு அடுத்த 10 ஆண்டு களில் அணு ஆயுதத்தை தயாரிக் கப்போகிறது.
இந்நிலையில், ஜப்பான், தென் கொரியாவுக்கு அமெரிக்கா பாது காப்பு வழங்குவதைவிட, வட கொரியாவிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அணு ஆயுதங் களை தயாரித்துக் கொள்ள அந்த நாடுகளை அனுமதிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. அதேநேரம், அணு ஆயுதங்கள் பரவுவதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சார மேலாளருக்கு ஆதரவு
டொனால்டு ட்ரம்பின் பிரச்சார மேலாளர் கோரே லிவாண்டோஸ்கி பெண் செய்தியாளர் ஒருவரை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட் டுள்ளது. இந்நிலையில், கோரேவுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.