உலகம்

பிரஸல்ஸ் தாக்குதலில் தொடர்புடைய 3 பேர் அடையாளம் தெரிந்தது: 4-வது நபரை தேடும் பணி தீவிரம்

பிடிஐ

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் தற்கொலைப்படை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 3 பேரின் அடையாளம் தெரியவந் துள்ளது. 4-வது நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரஸல்ஸ் நகரில் உள்ள ஜவென்டம் விமான நிலையம், மால்பீக் மெட்ரோ ரயில் நிலை யத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில் 34 பேர் பலி யானார்கள். சுமார் 200-க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

சகோதரர்களான காலித் மற்றும் இப்ராஹிம் எல் பக்ராவ் ஆகிய இருவரும் இந்த இரு இடங்களி லும் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, விமான நிலை யத்தில் உள்ள சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்தபோது, குண்டு வெடிப்புக்கு சற்று முன்னதாக சந்தேகப்படும் வகையில் 3 பேர் சூட்கேஸை ட்ராலியில் வைத்து தள்ளிச் சென்றது தெரியவந்தது. இவர்கள் எடுத்துச் சென்ற சூட்கேஸில் இருந்த வெடிகுண்டு களை வெடிக்கச் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் ஒருவர் சகோதரர்களில் ஒருவராக இருக்கும் எனக் கூறப் படுகிறது. 2-வது மனித வெடிகுண்டு நஜிம் லாச்ராவி என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர் ஐஎஸ் அமைப்பின் வெடிகுண்டு நிபுணர் என கூறப்படுகிறது.

எனினும், இந்த மூன்று பேரில் கருப்பு தொப்பி அணிந்திருந்த ஒருவர் தப்பி விட்டதாகக் கூறப் படுகிறது. இவர் ட்ராலியில் தள்ளிச் சென்ற சூட்கேஸ் அப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடந்த ஆண்டு பாரீஸில் நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பிரஸல்ஸ் நகரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சலே அப்தெஸ்லா முடன் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்.

          
SCROLL FOR NEXT