தற்போதைய அமைச்சரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரியா பல்கலைக் கழக மாணவர்களைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
ருகுண பல்கலைக் கழக மாணவர்களை கும்பல் ஒன்றைத் திரட்டிச் சென்று ஜெயசூரியா தாக்கியதாக ஜனதா விமுக்தி பெரமுணா குற்றம்சாட்டியது. ஆனால் இதனை ஜெயசூரியா கடுமையாக மறுத்துள்ளார்.
மாத்தரையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கண்காட்சி வைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த தாக்குதல் என்றும் ஜனதா விமுக்தி பெரமுணா கூறியிருந்தது.
ஆனால் ஜெயசூரியாவோ கிராம மக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவே தான் சென்றதாகக் கூறுகிறார்.
மேலும் பல்கலைக் கழக மாணவர்களைக் கண்டித்து கிராம மக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் உள்ளூர் எம்.பி. என்ற முறையிலேயே தான் கலந்து கொண்டதாகவும், தாக்குதல் நடந்தபோது தான் அங்கு இல்லவேயில்லை என்றும் மறுத்துள்ளார் ஜெயசூரியா.
ஜெயசூரியா இலங்கைமத்திய அரசில் அஞ்சல் சேவைத்துறை துணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.