இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டதாக மஹிந்த ராஜ பக்ச அறிவித்தபோது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருந்தார் என்று முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நியமன எம்.பி.யாக பதவி வகிக்கும் அவர் இலங்கை நாடாளு மன்றத்தில் நேற்றுமுன்தினம் பேசியதாவது:
கடந்த 2009 மே 16-ம் தேதி வெளி நாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பிய மஹிந்த ராஜபக்ச மண்ணை முத்தமிட்டார். அன்று போர் முடியவில்லை. ராணுவ தலைமைத் தளபதியான எனக்கு 18-ம் தேதி பதவி உயர்வு வழங்கி னார். அன்றும் போர் நிறைவடைய வில்லை.
மே 19-ம் தேதி போர் முடிந்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறி வித்தார். அன்றைய தினமும் போர் முழுமையாக நிறைவடைய வில்லை. அப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார்.
மே 19-ம் தேதி இரவு நாடாளு மன்றத்தில் இருந்து காரில் நான் சென்று கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சடலம் கண்டெடுக்கப் பட்டதாக தகவல் தெரிவிக்கப் பட்டது. இறுதிகட்ட போரின்போது வெள்ளை கொடி ஏந்தி சரண டைந்த விடுதலைப் புலிகள் தலைவர்களை கொலை செய்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த அதிபர் தேர்தலின் போது வெளிநாட்டுப் பார்வை யாளர்கள் இலங்கையில் முகா மிட்டிருந்ததால்தான் மைத்ரிபால சிறிசேனா அதிபரானார். அவர் தோற்றிருந்தால் நான், சிறிசேனா உட்பட ஏராளமானோர் சிறைக்குச் சென்றிருப்போம்.
நான் பதவியில் இருந்தபோது விடுதலைப் புலிகளிடம் இருந்து 200 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ஆனால் 110 கிலோ தங்கம் மட்டுமே மீட்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். அதன்பிறகு 500 கிலோ வரை தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவையில் பொன்சேகா பேசிய போது மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் வெளி யேறிவிட்டனர். இதை கண்டித்த பொன்சேகா, நான் கூறியது பொய் என்றால் என் மீது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பலாம் என்று சவால்விடுத்தார்.