உலகம்

தலிபான்கள் ஆட்சியை கைப்பாற்றுவார்கள் என்று முன்கூட்டியே அறிந்திருந்தோம்: பிரிட்டன்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பாற்றுவார்கள் என்று தாங்கள் முன்னரே அறிந்திருந்ததாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் கூறும்போது, அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றபோதே தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று அறிந்திருந்தோம். தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் அரசாங்கம் இருக்கும் இறுதியில் அமையும் என்று நாங்கள் மதிப்பீடு செய்திருந்தோம்.

தலிபான்களை ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினாலும் பல உலக நாடுகள் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கவில்லை.

முன்னதாக, ரஷ்யா தலைமையில் இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றது.

பின்னணி

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT