உலகம்

பூஸ்டர் தடுப்பூசி 95.6 பயனளிக்கிறது: பைஸர்

செய்திப்பிரிவு

தங்கள் நிறுவனம் உருவாக்கிய பூஸ்டர் தடுப்பூசி 95.6 பயனளிப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “ பூஸ்டர் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையில் 10,000 பங்கேற்றனர். இதன் முடிவில் பூஸ்டர் தடுப்பூசி 95.6% பயனளிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பை இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்குகிறது. இதன் முடிவுகள் விரைவில் பகிரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பெற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

பிரிட்டன், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில் கரோனா தொற்று கடந்த வாரம் அதிகமாக பதிவுச் செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று குறைந்துள்ளது. 15 % அளவில் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT