உலகம்

பிரான்ஸில் 2 லட்சத்துக்கு அதிகமான வீடுகளில் மின் தடை

செய்திப்பிரிவு

பிரான்ஸில் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ பிரான்ஸில் இந்த மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு நிலவுகிறது. இதில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

இதன் காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.புயல் காரணமாக நார்மண்டி, வடக்கு பிரான்ஸ், கிழக்கு பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 3,000 ஊழியர்கள்பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் தலைவர்கள் கால நிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT