தெற்காசிய பிராந்திய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) நாடுகள், எல்லை தாண்டிய தீவிர வாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பொதுவான நீதிமன்றம் அமைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாத எதிர்ப்புக் குழு கூட்டத்தில் ‘நீதியை உறுதி செய்தல்; தீவிரவாத வழக்குகளில் பயனளிக்கும் தீர்ப் பளித்தல்’ என்ற கருத்தரங்கில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் பாப்தே பேசியதாவது:
இந்தியாவில் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலாக மும்பை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. எல்லைக்கு அப்பாலிருந்து வந்த உத்தரவுகளுக்கு ஏற்ப தீவிரவாதி கள் செயல்பட்டனர்.
இந்த சம்பவம், எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் பரஸ்பரம் பேசிக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
சார்க் நாடுகளில் எல்லை தாண்டிய தீவிரவாத வழக்குகளை விசாரிக்க பொதுவான நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதில், ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் ஒரு நீதிபதி இடம்பெற வேண்டும். இதனால், எல்லை தாண்டிய தீவிர வாதத்தை எதிர்கொள்வது தொடர் பான நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு நீதிமன்றங்கள், ஒன்றுக் கொன்று மாறுபாட்டுடன் உள்ளன. சார்க் நாடுகளுக்கு அமைக்கப்படும் பொது நீதிமன்றம், எல்லை தாண்டிய தீவிரவாத வழக்குகளை விசாரிப்ப தில் உள்ள இடர்பாடுகள், தகவல் பரிமாற்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் என்றார்.