உலகம்

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த இந்தியா, அமெரிக்கா முடிவு

பிடிஐ

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வரும் 31-ம் தேதி அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக மத்திய வெளி யுறவுச் செயலாளர் எஸ்.ஜெய் சங்கர் வாஷிங்டனில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசை சந்தித்து ஆலோ சனை நடத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவநிலை மாற்றம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறை தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது, அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT