உலகம் முழுவதும் உள்ள உதிரி அணு மூலப்பொருட்களைப் பாதுகாப்பதே அமெரிக்காவின் முன்னுரிமையாக இருக்கும் என அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அணு பாதுகாப்பு மாநாடு இந்தவாரம் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:
அணு மூலப்பொருட்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினை, அணு பாதுகாப்பு மாநாட்டின் முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிகபட்ச முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயம்.
பெல்ஜியத்தில் உள்ள அணு நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங் களில் அதிவிரைவு ராணுவப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து அந்நாட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். பெல்ஜியத்தின் அணு சார்ந்த அமைப்புகளைப் பாதுகாக்க உதவி தேவைப்பட்டால், அதனை அளிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அதிபர் ஒபாமா இதற்கு முன்னுரிமை அளித்துள்ளார். இண்டியானாவின் செனட்டர் டிக் லூகருக்கு அதிக நேரம் ஒதுக்கி இதுதொடர்பாக அவர் விவாதித்துள்ளார். அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே ஒபாமா அணு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார். ஆகவேதான், அணு பாதுகாப்பு மாநாட்டை ஏற்பாடு செய்து, கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட வுள்ள அதிபர், நமது தேசிய பாது காப்புக்கு என்ன தேவை, எதற்கு முக்கியத்துவம், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை முடி வெடுத்து வருவது கட்டாயம்.இவ் வாறு அவர் தெரிவித்தார்.