உலகம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு

செய்திப்பிரிவு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி உற்பத்தியில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாக தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள், “தென் அமெரிக்க நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றன. சுமார் 1 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப ரஷ்யா உறுதியளித்துள்ளது. ஆனால், இதுவரை 4.8% கரோனா தடுப்பூசிகளை மட்டுமே ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் விரைவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 78 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT