ஈகுவடாரில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள் ளானதில் 22 பேர் உயிரிழந்திருப்ப தாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அதிபர் ரஃபேல் காரியா வெளியிட்டுள்ள ட்விட்டர் தகவலில், ‘விமான விபத் தில் ஒருவரும் தப்பிக்கவில்லை. அனைவரும் உயிரிழந்துவிட்டனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
ஈகுவடார் ராணுவ அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ விபத்து நடந்த பகுதியை பார்வையிடுவதற் காக விரைந்துள்ளார்.
பாராசூட் பயிற்சிக்காக 19 வீரர் கள், 2 விமானிகள் மற்றும் ஒரு மெக்கானிக்குடன் பறந்த அந்த விமானம் பெரு நாட்டு எல்லை அருகே ஈகுவடாரின் கிழக்கு மாகா ணமான பஸ்தாவில் உள்ள அமேசான் மழை காடுகளில் நொறுங்கி விழுந்து விபத்துக் குள்ளானதாக ராணுவம் தெரிவித் துள்ளது. விமானம் முழுமை யாக சேதமடைந்திருப்பதால் வீரர்களின் சடலங்களை சேகரிப்ப திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.