வடகொரியா மீது ஐ.நா புதிய தடைகளை விதித்துள்ள நிலை யில், அணு ஆயுத சோதனை நடத்து வதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஜனவரி, 6-ம் தேதி வட கொரியா நான்காவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியது. அடுத்த ஒரு மாதத்துக்குள் மீண்டும் தொலைதூர இலக்கு களைத் தாக்கும் வல்லமை படைத்த ராக்கெட் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக் கும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப் பட்டது. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை உடனடியாக நடத்தும்படி விஞ்ஞானிகளுக்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
வடகொரியாவை அச் சுறுத்தும் வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மிகப் பெரிய அளவில் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரண மாகவே மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பதாக வடகொரிய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.