ஏழை, எளிய மக்களுக்கு தன்னலமற்ற சேவையாற்றுவதையே வாழ்வின் கடமையாக உணர்ந்து பணியாற்றிய அன்னை தெரசாவிற்கு செப்டம்பர் 4-ம் தேதி ரோமன் கத்தோலிக்க சர்ச் புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
அல்பேனியா நாட்டில் கடந்த 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி ஏழை குடும்பத்தில் பிறந் தவர் அன்னை தெரசா. அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா போஜாஸ்யூ. அதன்பின், இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட்டார். கடந்த 1929-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பிறகு அவரது சேவை இங்கே நிரந்தரமானது.
ரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவர் இறந்தால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் அதி காரம் வாடிகன் கத்தோலிக்க திருச் சபைக்குதான் உள்ளது. அதற்கு முன்னர் அவர் அருளாளர் என்ற அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறு வதற்கு 2 அற்புதங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும்.
இந்நிலையில் வாழ் நாள் முழுவதும் தொழுநோயாளி களுக்காகவும் ஏழை, ஏளிய மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவை புரிந்த தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அப்போதுதான் மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்றில் புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்ததும், அதன் பின் தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்து வந்த பின் புற்றுநோய் குணமானதாகவும் தெரிய வந்தது.
இதை வாடிகன் தீவிரமாக ஆய்வு செய்த பின், கடந்த 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவை ‘அருளாளர்’ என்று அங்கீகரித்தது. இதன் பிறகு புனிதர் பட்டம் வழங்கு வதற்கான இன்னொரு அற்புதத்தை பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அன்னை தெரசா நிகழ்த்தி உள்ளார் என்று தெரிய வந்தது.
பிரேசில் நாட்டில் ஒருவர் மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக அவரும் அவரது குடும்பத்தினரும் அன்னை தெரசாவை மனமுருக பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அதன்பின் அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்த 2-வது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார்.
சர்வதேச அளவில் பல நாடு களின் மிக உயர்ந்த விருதுகள் மற் றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி தனது 87-வது வயதில் கொல்கத்தாவில் காலமானார்.