இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ள பொருட்களைப் பார்வையிடும் பிரதமர் மோடி | படம் ஏஎன்ஐ 
உலகம்

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 தொல்பொருட்களுடன் தாயகம் திரும்பும் பிரதமர் மோடி

ஏஎன்ஐ

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, திருடப்பட்ட நம்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தும் 157 தொல்பொருட்கள் அமெரிக்க அரசால் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களுடன் பிரதமர் மோடி தாயகம் திரும்புகிறார்.

157 கலைப் பொருட்களில் 71 பொருட்கள் கைவினைப் பொருட்கள், இந்து மதத்தின் கலைகளை விளக்கும் 60 சிலைகள், பவுத்த மதத்தை விளக்கும்16 சிலைகள், ஜைன மதத்தை விவரிக்கும் 9 சிலைகள் மீட்கப்பட்டு தாயகம் கொண்டு வரப்படுகின்றன.

அமெரிக்கா அரசின் மூலம் மீட்கப்பட்ட இந்தியாவின் தொல்பொருட்களை திரும்பி ஒப்படைத்தது குறித்து பிரதமர் மோடி நன்றியும், வாழ்த்தும் தெரிவி்த்துள்ளார்.

12 நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலத்தில் செய்யப்பட்ட கடவுள் நடராஜர் சிலை, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த 8.5 செமீ நீளமுள்ள ரேவாந்தா சிலை உள்ளிட்ட மிகப் தொன்மையான சிலைகள் இதில் அடங்கும்.

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கலைப் பொருட்களை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்துவருகிறது.

மத்திய அ ரசு வட்டாரங்கள் கூறுகையில் கடந்த 1976ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகளவில் இந்தியா சார்பில் 13 தொன்மையான பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஆனால், 2014்ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின், இதுவரை 200க்கும் மேற்பட்ட இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விளக்கும் கலைப்பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதிலும் 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை ஒரு தொன்மையான சிலை மட்டுமே மீட்கப்பட்டது “ எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளில் மீட்கப்பட்டதைவிட அதிகமான தொன்மையான பொருட்களை உலகளவில் இருந்து மோடி அரசு மீட்டுள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு பிரதமர் மோடியின் பயனத்தின் போது, 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டுவரையிலான சிலைகள், கிறிஸ்துவுக்கு முன் உள்ள செம்புச் சிலைகள், டெரகோட்டா சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்கள் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளில் பல உலோகச்சிலை, கற்சிலை, டெரகோட்டா சிலை போன்றவை அடங்கும்.

லட்சுமி நாராயணன் சிலை, புத்தர், விஷ்ணு சிலை, சிவன் பார்வதி, 24 ஜைன தீர்த்தங்கார சிலை, கன்கலமூர்த்தி, பிராமி, நந்திகேசா போன்ற வெண்கலத்திலான சிலைகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளன.

இந்து மதத்தின் பாரம்பரியத்தை விளக்கும் 3 தலை பிரம்மா சிலை, குதிரையில் சூரியபகவான் சிலை, விஷ்ணு சிலை, சிவன், தட்சிணாமூர்த்தி சிலை, நடனமாடும் கணேசன், புத்தர் சிலை, போதிசத்வா மஜூஸ்ரீ, தாரா, ஜைன சிலை, பத்மாசானா தீர்த்தங்காரா சிலை, ஜைன சவுபிசி சிலை போன்றவை அடங்கும்.

SCROLL FOR NEXT