ஆப்கானிஸ்தானில் வேலையிழந்ததால் காவல்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபானகள் ஆட்சி அமைந்துள்ளது. அங்கு இன்னும் அரசுத் துறைகள் முழுமையாக இயங்கவில்லை. இதனால் அங்கு கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.
இந்நிலையில் ஆப்கனின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் காவல் அதிகாரியாக இருந்த 38 வயது ஷகீர் வேலையில்லாததால் தற்கொலை செய்து கொண்டார்.
ஷகீர் கடந்த மூன்று மாதங்களாகவே அவருக்கு முந்தைய அரசும் சம்பளம் கொடுக்கவில்லை. இந்நிலையில், 2 மனைவிகள் 7 குழந்தைகள் எனப் பெரிய குடும்பத்துடன் வசித்துவந்த அவர் குடும்பத்தைக் காப்பாற்ற வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தற்கொலை அதிகரித்து வருகிறது.தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆப்கானிஸ்தானில் காவல்துறை, ராணுவம் என 30000 பேர் வேலையிழந்துள்ளனர். இன்னும் பல்வேறு துறைகளிலும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
பிழைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலிபான்களை பொதுமக்கள் வேண்டிவருகின்றனர்.